மாநிலங்களவையில் காலியான 6 இடங்களுக்கு அடுத்த மாதம் 20-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆந்திராவிலிருந்து மூன்று பேர், ஒடிஸா, மேற்கு வங்கம் மற்றும் ஹரியானாவிலிருந்து தலா ஒருவர் என மொத்தம் ஆறு பேர் மாநிலங்களவைக்குத் தேர்வாகின்றனர். வாக்குப் பதிவு நடைபெறும் டிசம்பர் 20-ஆம் தேதியே தேர்தல் முடிவும் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.