சபரிமலையில் 18 ஆம் படிகளில் நின்று போலீசார் புகைப்படம் எடுத்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சன்னிதானம் சிறப்பு அதிகாரிக்கு ஏடிஜிபி உத்தவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் சன்னிதானத்தில் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், 18ம் படியில் பக்தர்கள் ஏற உதவி செய்யவும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 15ம் தேதி நியமிக்கப்பட்ட முதல் பேட்ச் போலீசார் 18 ஆம் படிகளில் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து சர்ச்சையானது. இந்த சம்பவத்தில் ஏடிஜிபி தலையிட்டு சன்னிதானம் சிறப்பு அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளார்.