சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத விசயங்களை கட்டுப்படுத்த, கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இது தொடர்பாக பேசிய அவர், நமது நாட்டின் கலாச்சாரத்திற்கும், சமூக வலைதளங்களை உருவாக்கிய நாடுகளின் கலாச்சாரத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் உள்ளது எனவும், சமூக வலைதளங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கடும் சட்டங்கள் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், இது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.