எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவை தொடங்கியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மீண்டும் அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் அவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.
இதேபோல, மாநிலங்களவையிலும், எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தை எழுப்பின. அப்போது, பாரம்பரிய முறைப்படியே அவை நடத்தப்படும் என அவைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்து உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.