புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், கடல் அலைகள் இரண்டு மீட்டர் உயரம் வரை ஆர்ப்பரித்துக் கொண்டு கரையை நோக்கி வருகிறது.
ஆர்வமிகுதியில் கடலில் இறங்கி விளையாடுபவர்களை கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் எச்சரித்து வெளியேற்றி வருகின்றனர்.