கனமழை மற்றும் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் வருகை தந்தனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு உதவி ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வால் தலைமையில் 25 வீரர்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு உதவி ஆய்வாளர் ராஜகோபால் தலைமையிலான வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.