ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 3-வது நாளாக கடல் சீற்றமாக காணப்படுவதால் கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், 3-வது நாளாக பாம்பனில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பாம்பன் லைட் ஹவுஸ் அருகே இருந்த குடிசை வீடுகள் மற்றும் மீன் ஏற்றுமதி தொழிற்சாலைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன.
அப்பகுதியில் தூண்டில் வளைவு இல்லாததன் காரணமாக படகுகளை நிறுத்தி வைக்கவும் மீனவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், சூறைக்காற்று வேகமாக வீசி வருவதால் 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.