வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ள வானிலை ஆய்வு மையம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்காது என தெரிவித்துள்ளது.
நாளை காலை மகாபலிபுரம் – காரைக்கால் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.