மயிலாடுதுறை மாவட்டம் ராதாநல்லூர் கிராமத்தில் 20 வருடங்களாக வடிகால் தூர்வாரப்படாததால், 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள ராதாநல்லூர் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வடிகால் வாய்க்கால்களை தனி நபர்கள் ஆக்கிரமித்து தண்ணீர் வடிய வழியற்ற சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகும் நிலையில் காணப்படுகின்றன.இதனால் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு தண்ணீரை வடிய வைத்து நெற்பயிர்களை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.