மழை நிவாரண பணிகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்யும் என எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இன்றும் பெய்து கொண்டிருக்கிறது. இன்று இரவு புயல் கரையை கடக்கும் என செய்தி வந்துள்ளதாக தெரிவித்தார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஆட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், இன்று இரவு நிச்சயம் கடுமையான மழை பெய்யும் என்பதால் முழுமையான நிவாரண நடவடிக்கையில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளோம் என்றும் கூறினார்.
இதுவரை ஆபத்தான செய்திகள் எதுவும் வரவில்லை என தெரிவித்த முதல்வர், சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை என்றும், உடனுக்குடன் நீர் வடிந்து வருவதாகவும் கூறினார்.