சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் முக்கிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி மரக்காணம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்காபாதை, நங்கநல்லூர் பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, ரங்கராஜன்புரம் சுரங்கப்பாதை, துரைச்சாமி சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சப்வே, வில்லிவாக்கம், பெரம்பூர், ஸ்டான்லி சப் வே, வியாசர்பாடி சப்வே உள்ளிட்ட 12 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது