சென்னையில் மின்சார ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையின் புறநகர் ரயில் நிலயங்களில் முக்கியமான மற்றும் தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் செல்லும் நிலையமான தாம்பரம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் செல்லும் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியது. இதனையடுத்து மோட்டார் பம்புகள் மூலம் நீரை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே சென்னையில் மின்சார ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.