புதுச்சேரியில் கனமழை காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மழை நீரில் மூழ்கியது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி – மாமல்லபுரம் இடையே நேற்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது. இந்நிலையில், கரையை கடந்த புயலானது புதுச்சேரிக்கு அருகே மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகனமழை பதிவானது.
ராஜராஜேஸ்வரி நகர், ரெயின்போ நகர், வள்ளலார் சாலை உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய குடியிருப்புவாசிகள், பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், தெருக்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.