ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் 55-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. காற்றுடன் கூடிய அதிகனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, 19 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
மேலும், விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் அதிக அளவு மழைநீர் தேங்கியதால், விமானங்கள் இயக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால்,நேற்று மதியம் முதல் இன்று காலை 4 மணி வரை விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு 11 மணி 30 நிமிடத்திற்கு கரையை கடந்தது. இதனால், சென்னை விமான நிலையம் நள்ளிரவு 1 முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.