ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பிறகும் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துள்ளது. இந்த புயலின் காரணமாக கடலோர மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழை சற்று ஓய்ந்த நிலையில் மூன்று மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் மழை பெய்து வருகிறது. 47 சென்டி மீட்டர் மழைப்பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், திரையரங்குகளில் இன்று அனைத்து காட்சிகளையும் ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.