வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் “ஃபெங்கால்” புயல் கடந்த 12 மணி நேரத்தில் நிலையாக இருந்தது, இன்று காலை 11:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
புதுச்சேரிக்கு அருகில் கடலூருக்கு வடக்கே 30 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து கிழக்கே 40 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்மேற்கே 120 கி.மீ. மையம் கொண்டுள்ளது.
இது மிக மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து அடுத்த 12 மணி நேரத்தில் வட தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.