செங்கல்பட்டு அருகே தென்னேரி ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறுவதால் தரைப்பாலம் மூழ்கி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் தென்னேரி ஏரி நிறைந்து உபரிநீர் வெளியேறுவதால், குருவன்மேடு, ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப்பட்டு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.