அதானியை தனது குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவாரா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில், மகாகவி பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், பெண்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும் அவர் கூறினார்.
தமிழக அரசு உண்மையான பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்றும், அதானியை தனது குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை என முதலமைச்சர் கூறுவாரா? என்றும் தமிழிசை வினவினார்.