திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து 12 ஆயிரத்து 27 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பூண்டி அணைக்கு காலை 6 மணியளவில் நீர்வரத்து 14 ஆயிரத்து 800 கன அடியாக இருந்தது. இந்நிலையில், கனமழையால் பூண்டி அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்தது. இதை தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 34 புள்ளி 99 அடியை எட்டியது.
எனவே அணையின் பாதுகாப்பு கருதி தற்போது 12 ஆயிரத்து 27 கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.