கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு புது தில்லியில் உள்ள சம்விதான் சதானில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, அந்த குளிர்ந்த காலைப் பொழுதில், துணிச்சலானவர்கள் செய்த தியாகத்தை எப்போதும் நினைவில் கொள்வோம். தியாகிகளான நமது மாவீரர்களின் விரைவான மற்றும் தன்னலமற்ற செயலுக்காக மிகுந்த நன்றியுடன் இந்த நாளை நாம் அனைவரும் திரும்பிப் பார்க்க வேண்டியது அவசியம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.