மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.
பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பல்கலைக்கழகத்தில் சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாகவும், பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.