அசர்பைஜானில் விமானம் விபத்துக்குள்ளானதற்கு ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலே காரணம் என அந்நாட்டு அதிபர் குற்றம்சாட்டியுள்ளார்.
அசர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் கஜகஸ்தானில் தரையிறங்க முயற்சித்தபோது திடீரென விபத்துக்குள்ளானது.
இதில் 38 பேர் உயிரிழந்த நிலையில், விமானம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதற்கான அடையாளங்கள் விமானத்தில் தென்பட்டதாகவும் கூறப்பட்டது. ரஷ்யா நடத்திய தாக்குதலால்தான் விபத்து ஏற்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை அசர்பைஜான் அதிபர் இஸ்ஹாம் அலியேவ்வும் முன்வைத்துள்ளார். மேலும், ரஷ்ய வட்டாரங்கள் உண்மையை மறைக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.