திமுகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிப்பதாலே போராட்டங்கள் நடைபெறுவதாகவும், அண்ணா பல்கலை. மாணவிக்காக போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள் என்றும் கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் ஜெயிக்க முடியாது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்று வருவதாகவும் தினகரன் தெரிவித்தார்.