பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை, சைதாப்பேட்டை சின்னமலை நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை விநியோகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை முதல்வர் ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் வரும் 13 -ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.