சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது கிராமத்துக்கு செல்ல விரும்பியதற்கான காரணம் என்ன என்பதை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜீரோதா இணை நிறுவனர் நிகில் காமத் உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2014-ம் ஆண்டில் தான் பிரதமரானபோது தொலைபேசியில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவில் உள்ள தனது கிராமமான வத்நகருக்கு வர விருப்பம் தெரிவித்தார் என கூறினார்.
அதற்கு சீன தத்துவஞானி ஹியூன் சாங் வத்நகரில் அதிக நேரம் செலவிட்டார் எனவும், அவர் சீனாவுக்கு திரும்பியதும் ஜி ஜின்பிங்கின் கிராமத்தில் குடியேறினார் என்பதே காரணம் என விளக்கியதாகவும் கூறினார்.