விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவான நேசிப்பாயா படத்தின் டைட்டில் டிராக் வெளியானது.
இப்படத்தில் நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இத்திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டைட்டில் டிராக்கான நேசிப்பாயா வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்பாடலின் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, ஜேவட் அலி, பெல்லாஷிண்டே இணைந்து பாடியுள்ளனர்.