நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் உணவு தேடி திரிந்த பெண் யானை மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதிக்குள் காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுவது வழக்கம். அ
ந்த வகையில் காட்டுபகுதியில் உணவு தேடி சுற்றித்திரிந்த பெண் யானை ஒன்று, ஆறாவது கொண்டை ஊசி வளைவு அருகேயுள்ள மலையில் இருந்து தவறி கீழே விழுந்தது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் மயங்கிய நிலையில் கிடந்த யானையை காப்பாற்ற முயன்றனர்.
எழுந்து நடக்க முயன்ற யானை மீண்டும் தவறி விழுந்து யானை பரிதாபமாக உயிரிழந்தது.