அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் கடந்தாண்டு ஜனவரி 22ஆம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் முன்னிலையில், குழந்தை ஸ்ரீராமர் விக்கிரகத்தின் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு விழா 22ஆம் தேதி கோலாகமாக நடைபெறவுள்ளதால், கோயில் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தை ராமரை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.