மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மாணவிகள் பேராசிரியர்களுடன் இணைந்து பாரம்பரிய முறைப்படி கரும்புகளை கட்டி, பானையில் பொங்கல் வைத்தனர்.
தொடர்ந்து பொங்கல் பானையை சுற்றி குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என உற்சாக முழக்கமிட்டனர். விழாவில், சினிமா பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.