திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.
மதுரை ஜல்லிக்கட்டுக்கு பிறகு திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி புகழ்பெற்றது. சூரியூர் நற்கடல்குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டில், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 775 காளைகளும், 500 வீரர்களும் பங்கேற்றனர். விறு விறுப்பாக நடைபெற்ற ஒவ்வொரு சுற்று போட்டிகளிலும் காளைகள் வாடிவாசலில் சீறிப்பாய்ந்தன.
பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க மோதிரம், இருசக்கர வாகனம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.