Apple CEO உறுதி : இந்தியாவில் விரைவில் Apple Intelligence!
May 10, 2025, 01:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

Apple CEO உறுதி : இந்தியாவில் விரைவில் Apple Intelligence!

Web Desk by Web Desk
Feb 3, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட Apple Intelligence, வரும் ஏப்ரலில் அறிமுகமாகும் என்று Apple CEO டிம் குக் உறுதி படுத்தியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் அனைத்தும், தங்கள் தயாரிப்புக்களில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI-யை இணைத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனமும், தனது ஐபோன் 16 வெளியீட்டு நிகழ்வின் போது, ஆப்பிள் நுண்ணறிவை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து,ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களை தனது வாடிக்கையாளர்களுக்குப் படிப்படியாக அறிமுகப்படுத்தி வந்தது.

கடந்த ஆண்டு iOS 18.3 Apple Intelligence வெளியாகியுள்ளது. iOS 18.3 மூலம், ஆப்பிள் அதன் ஆப்பிள் நுண்ணறிவு வெளியீட்டின் முதல் கட்டத்தை நிறைவு செய்துள்ளது.

ஏற்கெனவே உள்ள iOS 18 இல் இயங்கும் அனைத்து iPhoneகளுக்கும் இணக்கமானதாக இந்த Apple Intelligence உருவாக்கப்பட்டுள்ளது.

iPhone XR, 2 nd GENERATION iPhone SE, iPhone 11 வரிசை மற்றும் ஆப்பிள் புதிய மாடல் ஐபோன்கள் அனைத்திலும் இந்த iOS 18.3 Apple Intelligence செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இருந்தாலும், தகுதியான ஐபோன்களுக்கு மட்டும் இந்த புதிய புதிய AI அம்சங்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப் பட்டது. முதலாவதாக, இந்த அப்டேட் மூலம், AI அம்சங்கள் ஐபோனில் தானாகவே செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Apple Intelligence முதலில், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப அமெரிக்க ஆங்கில மொழியில் மட்டுமே கிடைத்தது.

அதன்பிறகு, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப உள்ளூர்மயமாக்கப்பட்ட ஆங்கில மொழியில் Apple Intelligence யை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. இதேபோல் மற்ற நாடுகளுக்கும் Apple Intelligence அறிமுகமாகுமா என்று எதிர்பார்க்கப் பட்டது.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், 2025 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், வரும் ஏப்ரல் மாதம் ,இந்தியாவில் Apple Intelligence வெளியாகும் என்று உறுதி படுத்தினார்.

மேலும்,Apple Intelligence பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி போர்த்துகீசியம், ஸ்பெயின் , ஜப்பான், கொரியா மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட சீனம் ஆகிய மொழிகளில் கிடைக்கும் என்று விவரித்தார்.

இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தையில் (iphone) ஐபோன் முதலிடம் பிடித்து உள்ளது. இதனால், உலக ஸ்மார்ட் போன் சந்தையில் ஐபோன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மேலும், ஆப்பிள் தயாரிப்பு கணினிகளும் மடிக்கணினிகளும் உலகளவில் மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளன. இதன் மூலம் உலகச் சந்தைகளில் சிறந்ததொரு இடத்தை ஆப்பிள் நிறுவனம் பிடித்திருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியா நீண்ட காலமாக ஒரு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது. இந்நிலையில்,இந்தியாவில் மேலும் நான்கு புதிய கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக டிம் குக் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் ‘பிராண்ட்’ மதிப்பு, இந்தியாவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள இளம் நுகர்வோரின் தேர்வாக ஆப்பிள் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Tags: Apple CEO confirmed: Apple Intelligence in India soon!Apple CEOApple Intelligence
ShareTweetSendShare
Previous Post

அதிகமாக பதிவிறக்கம் : சீன சூறாவளி DeepSeek பதறும் உலக நாடுகள்!

Next Post

மனிதாபிமானத்தின் மறுவடிவம் ‘515 கணேசன்’!

Related News

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

பயங்கரவாத பாகிஸ்தான் : நிரூபித்த ஆப்ரேஷன் சிந்துார் – காத்திருக்கும் தண்டனை!

இணையத்தில் OPERATION SINDOOR – நடந்தது எப்படி?

தரைமட்டமான பாகிஸ்தான் பிம்பம் : கொல்லப்பட்ட காந்தகார் விமான கடத்தல் குற்றவாளி!

கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு – வீடியோ வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

தானியங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளன : சிவராஜ் சிங் சவுகான்

ஆப்ரேஷன் சிந்தூர் : ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். ராணுவம் தாக்குதல் – சோஃபியா குரேஷி

இந்திய தாக்குதலில் பாக். ராணுவத்திற்கு சேதம் : விக்ரம் மிஸ்ரி

ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்!

ராணுவ நடவடிக்கைகளை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

ஏடிஎம்கள் அனைத்தும் இயங்குகின்றன : எஸ்பிஐ

36 இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் : விங் கமாண்டர் வியோமிகா சிங் 

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இருக்காது : இந்தியன் ஆயில் நிறுவனம்

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது  – திருமாவளவன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies