எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் : வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெலன்ஸ்கி - மன்னிப்பு கேட்க அமெரிக்கா வலியுறுத்தல்!
May 6, 2026, 10:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் : வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெலன்ஸ்கி – மன்னிப்பு கேட்க அமெரிக்கா வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2025, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடந்த கடுமையான வாக்குவாதத்திற்கு பின் அவரை, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா – ரஷ்யா நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்பு கடந்த வாரம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. குறிப்பாக உக்ரைனுக்கு எதிரான பல விஷயங்கள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் அமெரிக்கா உக்ரைனுக்கு பல கட்டுப்பாடுகள் விதித்ததாகவும் கூறப்படுகிறது.

இது உக்ரைனை கோவப்படுத்திய நிலையில், அந்நாட்டுக்கு வழங்கிய 500 பில்லியன் டாலர் நிதியில் பாதிக்கு மேல் திருப்பிக் கொடுக்குமாறு அமெரிக்கா கூறி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நேற்று அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு மோதலில் முடிந்தது, பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்க துணை அதிபர் ஜெடி வான்ஸை குறிவைத்து அதிபர் ஜெலன்ஸ்கி பல கேள்விகளை முன்வைத்ததே இந்த மோதலுக்குக் காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக, ரஷ்யா – உக்ரைன் இடையே போரை நிறுத்த அமெரிக்கா ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு இடையூறு விளைவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவது உக்ரைனுக்கே அழிவை விளைவிக்கும் எனவும் துணை அதிபர் வான்ஸ் எச்சரித்தார்.

இதில் கோபமான ஜெலன்ஸ்கி 2019-ல் இருந்து ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில், அவர்களை தடுக்காமல் நீங்கள் எதை ராஜாங்க நடவடிக்கை என்று குறிப்பிடுகிறீர்கள் என்று வினவினார். மேலும், அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடல் இருப்பதால் அமெரிக்காவுக்கு ஆபத்தில்லை என்று அர்த்தமல்ல என குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, வருங்காலத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவால் ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்தார்.

இதனிடையே ஓவல் அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலுக்குப்  உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.

Tags: trump zelenskyy meetingtrump zelenskyy meet in ustrump zelenskytrum Zelensky clashDonald TrumpTrumpUS Secy of State Marco RubioZelenskyytrump zelenskyy
ShareTweetSendShare
Previous Post

டாலருக்கு மாற்று நாணயம் – ப்ரிக்ஸ் உறுதி!

Next Post

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies