ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை மற்றும் டெல்லி அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் வரும் 5ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இதற்காக டெல்லி அணி வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். இதேபோல் சென்னை வந்தடைந்த சிஎஸ்கே அணி வீரர்களையும் விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.