ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கமுதி மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், 10ஆம் நாள் விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
கமுதி பேருந்து நிலையம் பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட பக்தர்கள், பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.