கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் உள்ள மின் மயானத்தை, குப்பைகள் தரம் பிரிக்கும் கூடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளாங்குறிச்சி பகுதியில் 4 ஏக்கர் 20 சென்ட் என்ற அளவில் மயானப் பகுதி உள்ளது. இதில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக 2 ஏக்கர் அளவில் மின் மயானம் செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பகுதியில் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காகத் தரம் பிரிக்கும் கூடம் அமைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூடம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். இதனைக் கண்டித்த பொதுமக்கள் தங்களுக்குக் குப்பைகள் தரம் பிரிக்கும் கூடம் வேண்டாம் என வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.