ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்த ராமசாமி – பாக்கியம் தம்பதியினர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.
நகைக்காக இந்த தம்பதியை அடித்துக் கொலை செய்த மர்ம நபர்கள், 30 சவரன் தங்க நகைகளைத் திருடிச்சென்றனர்.
இந்த கொலை தொடர்பாகக் கோவை சரக டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், குற்றவாளிகள் குறித்த துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
குற்றவாளிகளைப் பிடிக்க முன்னதாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதல் தனிப்படைகளை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் சிசிடிவி காட்சிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா என்பது பற்றியும், முதியவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.