தங்களை காப்பாற்றுமாறு உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சியதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், நம் நாட்டின் பெண்களின் திலகத்தை அழித்தவர்களின் தலைமையகத்தையே அழித்துள்ளோம் எனவும், சர்வதேச தீவிரவாதத்தின் பல்கலைக்கழகங்கள் முற்றிலுமாக சிதைக்கப்பட்டன எனவும் கூறினார்.
பாகிஸ்தானின் ஒவ்வொரு பயங்கரவாத கட்டமைப்பு மீதும் தாக்குதல் நடத்தி, அவர்களை மண்ணை கவ்வ செய்ததாக கூறிய பிரதமர் மோடி, 3 நாட்களில் பயங்கரவாதிகளை மண்டியிட வைத்ததாக கூறினார்.
பாகிஸ்தானின் உண்மையான முகம் என்ன என்பதை உலக அரங்கில் நாம் தெரியப்படுத்தி உள்ளதாக கூறியதுடன், தங்களை காப்பாற்றுமாறு உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சியதாக விமர்சித்தார்.
பாகிஸ்தானின் இதயத்தை நாம் தாக்கியுள்ளோம் என கூறிய பிரதமர் மோடி, எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று சர்வதேச அளவில் பாகிஸ்தான் உதவி கேட்டது என கூறினார்.
நமது முப்படைகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் எப்போதுமே தயாராக உள்ளதாகவும், பாகிஸ்தான் அணு ஆயுத பூச்சாண்டி காட்டுவது இந்தியாவிடம் செல்லுபடி ஆகாது எனவும்
தெரிவித்தார்.