குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை முப்படை தளபதிகள் சந்தித்து ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பாக விளக்கினர்.
டெல்லியிலுள்ள குடியரசு தலைவர் மாளிகையில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌஹான், ராணுவ தளபதி உபேந்திர திவேதி, விமானப்படை தளபதி ஏ.பி.சிங் மற்றும் கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோர் முர்முவை நேரில் சந்தித்தனர்.
‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து குடியரசு தலைவரை சந்தித்த அவர்கள், தாக்குதல் தொடர்பாக விவரித்தனர். அப்போது, இந்திய படைகளின் வீரம் மற்றும் அர்ப்பணிப்பு நாட்டை பெருமை கொள்ளச் செய்துள்ளதாகக்குடியரசு தலைவர் முர்மு பாராட்டினார்.