கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின், டாஸ்மாக் ஊழலால் பயந்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் கலந்து கொள்ளவில்லை? என்றும், 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்திருந்தால் மக்களுக்கு நன்மை கிடைத்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
டாஸ்மாக் ஊழலுக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளதாகவும், கருப்பு பலூனை பறக்கவிட்டு பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் ஸ்டாலின் என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடமையை செய்ய
தவறிவிட்டார் என்றும், திறமையற்று ஆட்சி செய்வதால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இபிஎஸ் தெரிவித்தார்.