மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிடுவாகள் என தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணைபொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அதிமுக வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் ஆகியோர் அதிமுக சார்பாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.
2026 மாநிலங்களவை தேர்தலின்போது தேமுதிகவிற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.