திருப்பூரில் ஆன்லைன் விளையாட்டில் 3 லட்சம் ரூபாயை இழந்த பனியன் நிறுவன மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த சிவா வெங்கடாசலம் என்பவர் பனியன் நிறுவன மேலாளராக பணியாற்றி வந்தார்.
ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான இவர், 3 லட்சம் பணத்தை இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.