செவி சாய்க்குமா அரசு? - சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!
Jan 18, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Jun 15, 2025, 06:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் துயரத்தில் உள்ளனர். பள்ளியின் முன்பு குண்டும்  குழியுமாகக் காட்சியளிக்கும் சாலையாலும்  குப்பை கழிவுகளாலும் அவதிப்படுகின்றனர். அவர்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

சேலம் உத்தம சோழபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.  1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கான கட்டடம் தனியாகவும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை மற்றொரு கட்டடமும் உள்ளன. அதாவது 5ஆம் வகுப்பு வரை உள்ள கட்டடம் வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட உத்தம சோழபுரம் பஞ்சாயத்திலும்,  8ம்  வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளின் வகுப்பறை கட்டடம் பனைமரத்துப்பட்டி ஒன்றியம் நெய்க்காரப்பட்டி பஞ்சாயத்திலும்  செயல்படுகின்றன.

இரண்டுக்கும் 300 மீட்டர் இடைவெளியே உள்ளன. இந்த இரண்டு கட்டடங்களுக்கும் இடையே ஆறு மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலை இன்னும் மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதுதான் மாணவ மாணவிகளை அவதிப்பட வைத்துள்ளது.

புதிய சாலை அமைக்கப்படும் எனக் கூறி தோண்டப்பட்ட பள்ளத்தால் மாணவ மாணவிகள் அவதிப்படும் நிலையில்  குப்பைகளின் தேக்கமும், கழிவு நீரும் மாணவ மாணவிகள் மட்டுமின்றி நோய் பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளன மேலும் பள்ளியில் 135 மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.  இவர்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை போதிய கதவுகள் இல்லாமல் திறந்தவெளி கழிப்பிடமாகக் காட்சியளிக்கிறது.

குப்பைகள் பள்ளி வளாகத்தை ஒட்டிய பகுதியிலும், அருகே உள்ள கரபுரநாதர் கோயில் மதில் சுவர் மீதும் கொட்டப்படுவதால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் முகாமிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிலையில் மாணவ மாணவியர்களை மட்டும் மறந்தது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்துக்கும் தமிழக கல்வித்துறைக்கும் உத்தரவிட்டு சாலை , புதிய சுகாதார வசதிகளை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags: Will the government listen? - Request to the Chief Minister who came to Salemgovt schoolDMKMK Stalin
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பள்ளி மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies