பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி - பொதுமக்கள் அவதி!
May 6, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Jun 20, 2025, 07:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையின் மையப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் உரிய நேரத்தில் பணிகள் முடிக்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நுங்கம்பாக்கம் என்பது சென்னையின் மையப்பகுதி என்பதைத் தாண்டி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் பிரதான பகுதியாக அமைந்திருக்கிறது. அப்படியான பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் பள்ளம் மேடுகள், பணிகள் முடிந்தும் மூடப்படாத பள்ளங்கள் எனச் சாலைகளில் பயணிக்கவே வாகன ஓட்டிகள் அச்சப்படும் சூழலை உருவாக்கியுள்ளது. வள்ளுவர் கோட்டம் சாலையில் தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் மாதங்கள் பல கடந்தும் நிறைவடையாமலே காட்சியளிக்கிறது.

குறிப்பிட்ட காலங்களுக்குள் முடிக்கப்பட வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள் மழைக்காலம் முடிந்தும் தொடர்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் அரை மணி நேரம் மழைபெய்தாலே மழைநீர் குளம் போலத் தேங்கியிருக்கும் வள்ளுவர் கோட்டம் சாலையில், பள்ளம் எது? மேடு எது? எனத் தட்டுத்தடுமாறியே பயணிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

காலை 7 முதல் 9 மணி வரையிலும் மாலை 4 முதல் 7 மணி வரையிலும் பள்ளி கல்லூரிக்குச் செல்வோர், பணிக்குச் செல்வோர் என ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் இந்த சாலையில் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் மழைநீர் வடிகால் பணிக்கென பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் நிலையிலும், அப்பணிகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்கப்படாமல் இருப்பது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே வெளிப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: மழைநீர் வடிகால் பணிபொதுமக்கள் அவதிThousands of crores wasted: Rainwater drainage work at a snail's pace - public sufferingநத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணிகோடி வீண்
ShareTweetSendShare
Previous Post

எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!

Next Post

பூச்சிகளின் ஆச்சரியங்கள்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies