கட்டிய ஒன்றரை ஆண்டுகளில் இடிந்து விழும் குடியிருப்புகள் - பரிதவிக்கும் மக்கள்!
Feb 4, 2026, 08:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கட்டிய ஒன்றரை ஆண்டுகளில் இடிந்து விழும் குடியிருப்புகள் – பரிதவிக்கும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Jun 23, 2025, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கட்டி முடிக்கப்பட்ட ஒன்றரை வருடத்தில் மேற்கூரை இடிந்து விழும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகள் அங்கு வசிக்கும் மக்களின் உயிர் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. குடியிருப்பை முழுமையாக ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என குடியிருப்புவாசிகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை அடுத்த திருவான்மியூரில் உள்ள பெரியார் நகரில் இடிந்து விழும் நிலையிலிருந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பை அகற்றிவிட்டு புதியதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு அண்மையில் திறக்கப்பட்டது.

62 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கூட ஆகாத நிலையில், குடியிருப்புகளின் மேற்கூரைகள் இடிந்து விழுவதால் அங்குக் குடியிருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். குடியிருப்பின் உண்மை நிலை குறித்து அறியத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்திய நேரடி கள ஆய்வில் அதன் நிலை மேலும் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஒவ்வொரு முறை வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளாகும் போது ஆய்வு செய்வதையும், அதன் பின்னர்  தற்காலிக பூச்சு வேலையைப் பார்க்கும் அதிகாரிகளால் குடியிருப்புவாசிகள் தங்களின் வீட்டில் தங்கவே அச்சப்படும் சூழலை உருவாக்கியுள்ளது.

குடிசைமாற்று வாரியத்தை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எனப் பெயர் மாற்றியதைக் கொண்டாடும் தமிழக அரசு, அக்குடியிருப்பைத் தரமாகக் கட்ட தவறிவிட்டதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்பில் ஒவ்வொரு நாளும் உயிரைப் பணயம் வைத்து வாழ வேண்டிய சூழலுக்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, புளியந்தோப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இடிந்து விபத்துக்குள்ளான நிலையில், அது போல மேலும் ஒரு விபத்து நிகழும் முன்பாக பெரியார் நகர் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை முழுமையாக ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Apartments that collapse within a year and a half of being built - people are sufferingபரிதவிக்கும் மக்கள்இடிந்து விழும் குடியிருப்புகள்
ShareTweetSendShare
Previous Post

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யாரும் வரமாட்டார்கள் என்ற திமுக-வின் எண்ணம் பொய்த்து போனது : நயினார் நாகேந்திரன்!

Next Post

நரிக்குறவ மக்கள் வனப்பகுதிக்கு இடமாற்றம் : தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு!

Related News

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் -சிதைந்த பாக்- வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – திர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவத்திற்கு எதிராக பாஜக போராட்டம்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

சேலத்தில் ஜீவசமாதி அடைய அனுமதி மறுத்த அரசு அதிகாரிகள்! – சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியார் விபரீத முடிவு

இந்தியர்களுக்கு சுங்க வரி வரம்பை உயர்த்திய மத்திய அரசு -பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை அணிந்து வர முடியும்!

ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்,அமெரிக்கா வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு NDA கூட்டணி எம்பிக்கள் வாழ்த்து

விஜயை பார்த்து திமுகவுக்கு பயம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies