B -2 Bomber விமான ரகசியம் : சீனாவுக்கு விற்ற இந்திய அமெரிக்கர் யார் தெரியுமா?
Sep 14, 2026, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

B -2 Bomber விமான ரகசியம் : சீனாவுக்கு விற்ற இந்திய அமெரிக்கர் யார் தெரியுமா?

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 09:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தப் பயன்படுத்திய B -2 Spirit Stealth Bomber போர் விமானத்தை ஒரு இந்திய அமெரிக்கர் தான் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. யார் அவர் ? அவர் பின்னணி என்ன? இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

உலகின் மிக ஆபத்தான போர் விமானம் B -2 ஆகும். அதிநவீன போர் விமான தயாரிப்பில் 1970ம் ஆண்டிலேயே அமெரிக்கா இறங்கியது. புதிய போர் விமானத்தை தயாரிக்கும் பணி நார்த் ரோப் கார்ப்பரேஷனிடம் ஒப்படைக்கப்பட்டது. 1989ம் ஆண்டு முதல் B -2 போர் விமானம் அறிமுகம் செய்யப்பட்டது.

B -2 Spirit Stealth Bomber போர் விமானம், இதுவரை உருவாக்கப்பட்ட போர் விமானங்களிலேயே மிக முக்கியமான அதிநவீன இரகசிய விமானம் ஆகும். பனிப்போரின் போது நார்த் ரோப் க்ராம்மனால் உருவாக்கப்பட்டது இந்த போர்விமானம்,

172 அடி அகலம், 69 அடி நீளம்  கொண்ட இந்த போர் விமானத்தின் எடை 1,52, 000 கிலோ ஆகும். இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 18,000 கோடி ரூபாய் ஆகும். சுமார்  30,000 கிலோ எடை உடைய பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளைச்  சுமந்து செல்லக் கூடிய ஒரே விமானம் இதுவாகும். மணிக்கு 1,010 கிலோமீட்டர் வேகத்தில், சுமார் 50,000 அடி உயரத்தில் பறக்கக் கூடிய  இந்த விமானத்தில், ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 11,000 கிலோமீட்டர் வரை தரை இறக்காமல் பறக்க முடியும்.  B -2 Spirit Stealth Bomber போர் விமானத்தை, அதன் முக்கோண வடிவம் மற்றும் சிறப்பு பூச்சுகள் காரணமாக,  எந்த ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பாலும் கண்டு பிடிக்க முடியாது.

அமெரிக்க விமானப் படையிடம் மொத்தம் இருபது  B -2 Spirit Stealth Bomber போர் விமானங்கள் உள்ளன. தனது F-16, F -35 ரக போர் விமானங்களை பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ளது. ஆனால், இந்த B -2 ரக போர் விமானங்களை அமெரிக்க எந்த நாட்டுக்கும் விற்பனை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட B -2 Spirit Stealth Bomber விமானத்தின் தயாரிப்பில் ஒரு இந்திய அமெரிக்கரின் பங்கு மிக முக்கியமானதாக இருந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த  (Noshir Gowadia) நோஷிர் கோவாடியா, நார்த்ரோப் நிறுவனத்தில், விமானத்தின் உந்துவிசையைக் கண்காணிக்கக்கூடிய தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வந்தார்.

எந்த ரேடார் கண்ணிலும் தெரியாமல் குண்டுவீசிவிட்டுத் தப்பிக்கும் வகையில், B-2 போர் விமானத்தின் அல்ட்ரா-சீக்ரெட் எக்ஸாஸ்ட் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதான் B-2 விமானத்தின் மிக முக்கிய அம்சமாகும்.

இந்த தொழில் நுட்பப் பிரிவின் தலைமை விஞ்ஞானியாக  பணியாற்றி வந்த  (Noshir Gowadia) நோஷிர் கோவாடியா “Blueberry Milkshake” என்ற ரகசிய பெயராலேயே அழைக்கப்பட்டார்.  ராணுவ ரகசியங்களை அணுகக் கூடிய  உயர் பாதுகாப்பு அனுமதியை அமெரிக்கா அவருக்கு வழங்கியிருந்தது.  திடீரென்று, 1986-ல் நார்த்ரோப் நிறுவனப் பணியை விட்டுவிட்டு, பல்வேறு பல்கலைக்கழகங்களில் விமானவியல் பாடத்தின் சிறப்புப் பேராசிரியராகப் பணி புரிந்துவந்தார்.

2005ம் ஆண்டு, அடையாளம் தெரியாத ஒருவரிடம் இருந்து ( Noshir Gowadia) நோஷிர் கோவாடியாவுக்கு வந்த கண்டெய்னரில், நூற்றுக்கணக்கான வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை FBI கண்டுபிடித்தது. அதில், சீனாவின் ரகசிய அரசு அதிகாரிகளுடனான தொடர்புகள், பல மின்னஞ்சல் பதிவுகள் இருந்தன.

விசாரணையில் 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுக்கு இடையில், சீனாவின் Chengdu செங்டு மற்றும் Shenzhen (ஷென்செனுக்கு) பல முறை (Noshir Gowadia0 நோஷிர் கோவாடியா பயணம் செய்திருப்பது தெரியவந்தது.

ரேடாரில் இருந்து தப்பிக்கும் B -2 Spirit Stealth Bomber போர் விமானத்தின் இரகசிய தொழில்நுட்பத்தைச் சீனாவுக்கு  வழங்கிய (Noshir Gowadia) நோஷிர் கோவாடியா, எப்படி B -2  போர்விமானம் radar and infrared சென்சார்களை மறைத்துவிட்டு பறக்கும் என்பதை விவரிக்கும் விளக்கக்காட்சிகளையும் கொடுத்துள்ளார். இதற்காக, மூன்று ஆண்டுகளில், சீனாவிடம் இருந்து 110,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான பணத்தை மோசடியாகப் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் உளவுச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப் பட்ட Noshir Gowadia நோஷிர் கோவாடியாவுக்கு, 32 ஆண்டுகள் கடும்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவின் Colorado வில் உள்ள  Florence ADX supermax facility சிறையில் தண்டனையை (Noshir Gowadia) நோஷிர் கோவாடியா அனுபவித்து வருகிறார்.

(Noshir Gowadia) நோஷிர் கோவாடியா தேச துரோக நடவடிக்கைகளால், சீனா அடுத்த தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை தயாரித்துவிட்டது. (Noshir Gowadia) நோஷிர் கோவாடியா கைதாகி 20 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு மே மாதம், மேற்கு சீனாவில் ஒரு தரிசு விமான ஓடுபாதையில்  B -2 Spirit Stealth Bomber விமானத்தைப் போன்ற ஒரு விமானம் இருப்பதைக் காட்டும்  செயற்கைக்கோள் படங்களை The War Zone கண்டுபிடித்தது. அது  சீனாவின் அதிநவீன H-20 bomber போர் விமானம் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

அமெரிக்காவின் B -2 Spirit Stealth Bomber-யை விடவும் அதிக பலமான மற்றும் பயங்கரமான அடுத்த  தலைமுறை போர் விமானத்தைச் சீனா தயாரித்து விட்டது. அமெரிக்க பாதுகாப்புத் திட்டங்களை  (Noshir Gowadia) நோஷிர் கோவாடியா  வழங்காமல்  இருந்திருந்தால், H-20 bomber போர் விமானத்தைச் சீனா தயாரிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: B -2 Spirit Stealth Bomber போர் விமானம்chinaamericaபங்கர் பஸ்டர் வெடிகுண்டுB-2 Bomber Flight Secret: Do you know who the Indian-American sold to China?Noshir Gowadia
Share
Tweet
SendShare
Previous Post

விடிய விடிய போதை விருந்து : கொத்தாக சிக்கும் பிரபலங்கள்!

Next Post

அடையாளத்தை இழக்கும் அண்ணா பல்கலைக்கழகம்!

Related News

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies