கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கும் தேர்தல் சுற்றுப் பயணத்தை தானும், மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்க இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நாளை தொடங்கும் தேர்தல் சுற்றுப் பயணத்திற்கு பாஜக ஆதரவு அளிப்பதாக கூறினார். பாஜக தொண்டர்கள் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஈரானில் இருந்த 15 தமிழர்களை பாஜக தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதாகவும் கூறினார். அவர்களை வரவேற்க செல்ல உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.