மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஐஜி ஜியாவுல் ஹக் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் சுந்தரேசன் பணியாற்றி வருகிறார்.
இவரது வாகனத்தை காவல்துறை பறித்துக் கொண்டதால், டிஎஸ்பி சுந்தரேசன் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஎஸ்பி சுந்தரேசன், நேர்மையான பணிபுரியும் போலீசார் உயர் அதிகாரிகளால் பழிவாங்கப்படுகின்றனர் எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஐஜி ஜியாவுல் ஹக் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.