குண்டுக்கட்டாக ஒபாமா கைது : புயலை கிளப்பிய AI வீடியோ!
Jul 22, 2025, 11:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

குண்டுக்கட்டாக ஒபாமா கைது : புயலை கிளப்பிய AI வீடியோ!

Web Desk by Web Desk
Jul 22, 2025, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண் முன்னே, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குண்டுக்கட்டாக கைது செய்யப்படும் ஏஐ வீடியோ காட்சிகள் இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஒபாமா தனது பதவிக் காலத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக டிரம்ப் அண்மையில் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவர் உண்மையில் கைது செய்யப்பட உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

“யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை” எனக் கூறுவதை போல் தொடங்கும் வீடியோவை ட்ரூத் என்ற சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியவர் வேறு யாருமல்ல, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான்.

அமெரிக்க அதிபர் மாளிகையான ஓவல் அலுவலகத்தில், ஷோபாவில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் அமர்ந்திருக்க, திடீரென உள்நுழைந்த FBI அதிகாரிகள் ஒபாமாவை தரையில் முழங்காலிட வைத்து, கைகளை பின்னால் இழுத்து விலங்கிடுகிறார்கள். இதனை தற்போதைய அதிபர் டிரம்ப் சிரித்தவாறே பார்த்துக் கொண்டிருப்பதும், சிறை கம்பிகளுக்குப் பின்னால் ஒபாமா கைதிகளுக்கான  சீருடையில் அமர்ந்திருப்பது போலவும் வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.

45  வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை டொனால்ட் டிரம்ப் பதிவிட காரணம் என்ன என பல்வேறு தரப்பினரும் கேள்விக் கணைகளை வீசியுள்னர். சிலரோ இது AI வீடியோ என்பதை அதிபர் டிரம்ப் குறிப்பிடவில்லை என்றும், பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது ஏன் என்றும் கமெண்ட் அடித்துள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக பராக் ஒபாமாவும், அவரது உயர் மட்ட அதிகாரிகள் 2016ம் ஆண்டு உளவுத்துறையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியதாக என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கபார்ட்.

டிரம்புக்கு ரஷ்யாவுடன் தொடர்பு இருப்பதாக ஒபாமா கட்டுக்கதைகளை உருவாக்கியதற்கு ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், ஒபாமாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று துளசி கபார்ட் வலியுறுத்தியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக பராக் ஒபாமாவை மிகப்பெரிய தேர்தல் மோசடி பேர்வழி என டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் AI  வீடியோ முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

1972 தேர்தல் பிரச்சாரத்தின்போது, வாஷிங்டன் டிசியில் வாட்டர்கேட் வளாகத்தில் உள்ள ஜனநாயகக் கட்சியின் தேசிய தலைமையக அலுவலகங்களில் கொள்ளை நடந்த நிலையில், அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் பிரச்சார குழுவுடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் விஷயத்தை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதிபர் ரிச்சர்ட் நிக்சன் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனச் சர்ச்சை வெடித்தது. அதன் தொடர்ச்சியாக 1974ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிகழ்வையும், துளசி கபார்ட் கூறிய குற்றச்சாட்டையும் ஒப்பிடும் இணையவாசிகள், அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமா மீது உண்மையில் வழக்கு தொடர தீர்மானித்துள்ளாரா என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

Tags: Obama arrested in a bombshell: AI video that caused a stormகுண்டுக்கட்டாக ஒபாமா கைதுAI வீடியோAI Video
ShareTweetSendShare
Previous Post

திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம் – இபிஎஸ் அழைப்பு

Next Post

உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை பகிர்ந்த ராம் சரண்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies