ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் இன்று மாநிலங்களவையில் விளக்கமளிக்கவுள்ளனர்.
இன்று மதியம் ஒரு மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து, பிற்பகல் 3 மணியளவில் ஜெ.பி. நட்டா உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மாநிலங்களவையில் விளக்கம் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.