ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம் - மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!
Sep 14, 2026, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம் – மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 30, 2025, 06:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் வெற்றி என பெருமிதம் தெரிவித்தார்.

தீவிரவாத முகாம்கள் 22 நிமிடங்களில் முற்றிலுமாக தாக்கி அழிக்கப்பட்டதாக கூறிய அவர். பாகிஸ்தானின் மூலை முடுக்கெல்லாம் சென்று தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை தவிடுபொடியாக்கி உள்ளதாக கூறிய அவர், அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடிபணியாது என்பதை நிரூபித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப வல்லமையை ஆப்ரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை அழித்து ராணுவ கட்டமைப்பை சீர்குலைத்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த பிரதமர் மோடி, உலக தலைவர்கள் யாரும் தாக்குதலை நிறுத்துமாறு கூறவில்லை எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் தற்காப்புக்காக நமது ராணுவம் போராடியதை எந்த நாடும் தடுக்கவில்லை என கூறினார். மொத்தமுள்ள 193 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே ஆப்ரேஷன் சிந்தூர் காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸின் ரிமோட் கண்ட்ரோல் பாகிஸ்தானிடம் இருப்பதாக விமர்சித்த அவர், காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து ராணுவ தளவாட உடன்படிக்கைகளிலும் ஊழல் மலிந்திருந்ததாக குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ தளவாட உற்பத்திக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

காஷ்மீர் முதல் கச்சத்தீவு வரை காங்கிரஸின் கொள்கைகளால் தேசம் வருந்துவதாகக் கூறிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் தனது மறைமுக போரையும், பயங்கரவாத நடவடிக்கையையும் கைவிடும் வரை ஆப்ரேஷன் சிந்தூர் தொடரும் என்றும் தெரிவித்தார்

Tags: PoKTerrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.jammu Kashmir terro attackPM ModiOperation SindoorIndiaoccupied KashmirpakistanPahala attackparlimentlashkar e taiba
Share
Tweet
SendShare
Previous Post

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை – மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்கள் இன்று விளக்கம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies